சேலத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வியாபாரம் பாதிப்பு- தொழிலாளர்களின் நலன் கருதி திறக்க வலியுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி நகை கடைகளை திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி நகை கடைகளை திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
நகைக்கடைகள்
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 வாரத்திற்கு மேலாக ஆயிரக்கணக்கான நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு நகைகள் விற்பனை நடந்து வந்தது.
இந்த நகைக்கடைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நகை தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டறைகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தங்க நகைகளை தவிர வெள்ளி பொருட்கள், பிளாட்டினம், வைர நெக்லஸ், வெள்ளி கொலுசு விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திறக்க வலியுறுத்தல்
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் அதில் இருந்து மீள்வதற்குள், மீண்டும் கொரோனா பரவலால் கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைக்கடைகளில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே நகை தொழிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி நகைக்கடைகளையும், அதனை சார்ந்த நகை பட்டறைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என நகை தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story