சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பலி-புதிதாக 1,071 பேருக்கு தொற்று


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பலி-புதிதாக 1,071 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 7 Jun 2021 3:22 AM IST (Updated: 7 Jun 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 1,071 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 1,071 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,171 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 1,071 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் 201 பேர்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 201 பேர், எடப்பாடி பகுதியில் 52 பேர், ஓமலூரில் 70 பேர், சங்ககிரியில் 63 பேர், நங்கவள்ளியில் 49 பேர், வீரபாண்டியில் 52 பேர், அயோத்தியாபட்டணத்தில் 35 பேர், கொங்கணாபுரத்தில் 25 பேர், கொளத்தூரில் 21 பேர், காடையாம்பட்டியில் 33 பேர், மேட்டூரில் 37 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 35 பேர் தாரமங்கலத்தில் 32 பேர், மேச்சேரியில் 26 பேர், மகுடஞ்சாவடியில் 24 பேர், ஆத்தூரில் 15 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 27 பேர், பனமரத்துப்பட்டியில் 16 பேர், வாழப்பாடியில் 20 பேர், மேட்டூரில் 37 பேர், தலைவாசலில் 14 பேர், கெங்கவள்ளியில் 11 பேர், ஏற்காட்டில் 5 பேர் மற்றும் ஆத்தூர் நகராட்சி பகுதியில் 13 பேர், மேட்டூர் நகராட்சி பகுதியில் 37 பேர், நரசிங்கபுரம் நகராட்சியில் 3 பேர், எடப்பாடி நகராட்சியில் 6 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
903 பேர் குணமடைந்தனர்
அதேநேரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 28 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 29 பேர், திருப்பூரில் இருந்து சேலம் வந்த 10 பேர், சென்னையில் இருந்து சேலம் வந்த 18 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 21 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 19 பேர், கோவையில் இருந்து வந்த 12 பேர், விழுப்புரத்தில் இருந்து வந்த 22 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 903 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
பலி 1,118 ஆக உயர்வு
இதைதொடர்ந்து 10 ஆயிரத்து 441 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 34  பேர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.  இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,118 ஆக உயர்ந்துள்ளது.

Next Story