சேலம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி தலைவர் பலி


சேலம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி தலைவர் பலி
x
தினத்தந்தி 7 Jun 2021 3:22 AM IST (Updated: 7 Jun 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு பூஞ்சை நோய்க்கு வீராணம் ஊராட்சி தலைவர் பலியானார்.

அயோத்தியாப்பட்டணம்:
கருப்பு பூஞ்சை நோய்க்கு வீராணம் ஊராட்சி தலைவர் பலியானார்.
ஊராட்சி தலைவர்
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணம் ஊராட்சியை சேர்ந்தவர் எம்.ஆறுமுகம் (வயது 58). தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவர், வீராணம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார்.
இவர், கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். சில நாட்களில் அவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் பலி
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆறுமுகம் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி தலைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story