அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு


அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 5:39 AM IST (Updated: 7 Jun 2021 5:48 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 187 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,699 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 143 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10,389 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,166 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ேநற்று மொத்தம் 562 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 58 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 331 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story