போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நட்ட சப்-இன்ஸ்பெக்டர்
பிறந்தநாளையொட்டி போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றை சப்-இன்ஸ்பெக்டர் நட்டார்.
கம்பம்:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் உறுதிமொழி ஒன்றை எடுத்து கொண்டனர்.
அதன்படி அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு பிறந்த நாள், திருமண நாள் என்றால் போலீஸ் நிலைய வளாகத்திலோ அல்லது சாலையோரத்திலோ கட்டாயம் மரக்கன்று ஒன்றை நடவு செய்து பராமரித்து வளர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்தனர்.
இந்தநிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என்பவருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும்.
இதையொட்டி அவரது சார்பில் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமை தாங்கினார்.
முருகன் நடவு செய்த அந்த மரக்கன்றை, அவர் அங்கு பணிபுரியும் காலம் வரை தண்ணீர் ஊற்றியும், கூண்டு அமைத்தும் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
போலீசாரின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story