கயத்தாறில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
கயத்தாறில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்
கயத்தாறு:
கயத்தாறில் ஆத்தாங்கரை சுடலை மாடசாமி கோவில் அருகே நேற்று இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் 3 வாலிபர்கள் நின்றிருந்தனர். இவர்களை கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், தனிப்பிரிவு போலீசார் ஆனந்தகிருஷ்ணன், மற்றும் போலீஸ்கார் கோபாலகண்ணன் ஆகியோர் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் 3 பேரும் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ்(வயது20), பரமசிவம் மகன் வைகுண்டராமன்(21), அழகுபாண்டி மகன் அய்யாத்துரை(19) என தெரிய வந்தது. மேலும் அந்த 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story