சாத்தான்குளம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
சாத்தான்குளம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஹரிகரன் (வயது 22). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தாயார் கண்டித்து வந்துள்ளார். நேற்று தாயாரிடம் மது அருந்த அவர் பணம் கேட்டுள்ளார். அதற்கு தாய் கண்டித்து விட்டு, வேலைக்கு சென்று விட்டாராம். மனம் உடைந்து காணப்பட்ட ஹரிகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story