எட்டயபுரம் அருகே விபத்தில் தந்தை, மகன் காயம்
எட்டயபுரம் அருகே விபத்தில் தந்தை, மகன் காயம் அடைந்தனர்
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் (வயது48). இவரும், மகன் அஸ்வின்குமாரும்(18) மோட்டார் சைக்கிளில் டி.புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக உருளைகுடிக்கு சென்ற வேன் அவர்கள் மீது மோதாமலிருக்க வேனை திருப்பிய போது எதிர்பாராத விதமாக வேன் சாலையோரத்தில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. விபத்தில் காயமடைந்த தந்தை, மகனை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story