நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 7 Jun 2021 9:12 PM IST (Updated: 7 Jun 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நீடாமங்கலம்:
நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட  ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 
கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல்
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவி  பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல் உள்ளது. கருப்பு நாவாய் பூச்சியின் சேதாரம் நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் காணமுடியும். நாவாய் பூச்சியின் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டம் கூட்டமாக நெற்பயிரின் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே உள்ள தண்டு பகுதியில் சாற்றை உறிஞ்சும் தன்மை உடையது. இதன் மூலம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் தீயில் கருகியது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். 
வேப்பங்கொட்டை கரைசல்
இதன் சேதாரம் பயிரின் வளர்ச்சி பருவத்தில் இருக்கும்போது நடுக்குருத்து வாடிவிடும். பூக்கும் தருணத்தில் இருக்கும்  பட்சத்தில் வெண்கதிராக மாறிவிடும். இதனை கட்டுப்படுத்த தாவர பூச்சிக்கொல்லியான 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அதாவது 25 கிலோ வேப்பங்கொட்டையை ஒரு எக்டேருக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story