மாலை அணிவிப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் முகக்கவசம் அணிவித்து திருமணம் செய்த ஜோடி


மாலை அணிவிப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் முகக்கவசம் அணிவித்து திருமணம் செய்த ஜோடி
x
தினத்தந்தி 7 Jun 2021 9:39 PM IST (Updated: 7 Jun 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

எளிமையான முறையிலேயே திருமணங்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

கதக், 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எளிமையான முறையிலேயே திருமணங்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவை முன்னிட்டு கதக்கில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவிப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் முகக்கவசத்தை அணிவித்து திருமணம் செய்துள்ளனர். கதக் (மாவட்டம்) புறநகரை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கும் சவிதா என்பவருக்கும் 2 பேரின் பெற்றோரும் திருமணம் பேசி முடிவு செய்திருந்தார்கள். இவர்களின் திருமணம் நேற்று கதக் டவுனில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மணமகன், மணமகள் குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் மஞ்சுநாத் தன்னிடம் இருந்த முகக்கவசத்தை சவிதாவுக்கு அணிவித்தார். அதுபோல், சவிதா தன்னிடம் இருந்த முகக்கவசத்தை மஞ்சுநாத்திற்கு அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருப்பதால் தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தியதாகவும், முகக்கவசத்தை இருவரும் ஒருவருக்கொருவர் அணிவித்து திருமணம் செய்து கொண்டதாகவும் மஞ்சுநாத், சவிதா தெரிவித்துள்ளனர். இதுதொடா்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story