வா.சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் உள்பட 3 பேருக்கு கொரோனா
வா.சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் வா.சந்திராபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு டாக்டர், நர்சுகள், மருத்துவ உதவி பணியாளர்கள் என 30 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றி வரும் 2 நர்சுகள், ஒரு ஆய்வக உதவியாளர் என மொத்தம் 3 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நர்சுகள் வசித்து வரும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு 2 நர்சுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story