சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளர்கள் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தனியார் தொழிற்சாலை
பொள்ளாச்சி அருகே ஒரு தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் சேர்ந்த 14, 15 வயது சிறுமிகள் அங்கு வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த சிறுமிகளை கடந்த சில நாட்களாக காணவில்லை.
இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் பெத்தநாயக்கனூரை சேர்ந்த சின்னத்துரை (வயது 30), சரவணக்குமார் (வயது 28) ஆகியோர் சிறுமிகளை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
போக்சோ சட்டம்
அப்போது சிங்காநல்லூரில் வைத்து அந்த சிறுமிகளையும், அவர்களை கடத்தி சென்ற நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிற்சாலையில் பணிபுரியும் போது அந்த சிறுமிகளுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அந்த சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணக்குமார், சின்னத்துரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி அவினாசி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story