திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 30 பேர் பலி


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு  30 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jun 2021 10:28 PM IST (Updated: 7 Jun 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுக்கு 30 பேர் பலியாகி உள்ளனர்.

திருவண்ணாமலை

குறையத்தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றின் பரவல் குறைய தொடங்கியது. சமீபத்தில் நாளொன்றுக்கு 1,000 பேர் வரை பாதிக்கப்பட்டு இருந்தனர். 

தற்போது படிப்படியாக தொற்று பரவல் குறைந்து 500 பேருக்குள் வந்து உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இந்த நோய் தொற்றினால் 5 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

30 பேர் பலி

இந்த நிலையில் நேற்று அரசு தகவலின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக இந்த நோய் தொற்றினால் 30 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களில் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் உள்ளனர். திடீரென திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 361 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 331 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 37 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 

இதுவரை மாவட்டத்தில் 477 தொற்றுக்கு உயிரிந்து உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு காலம் முடியும் வரை மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story