மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் பண்ருட்டியில் பரபரப்பு


மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்  பண்ருட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 10:33 PM IST (Updated: 7 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பண்ருட்டி, 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 30). இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவரது மனைவி கர்ப்பமடைந்தார். அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது, ஜெயமணி சத்துமாத்திரை என்ற பெயரில் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அவரது மனைவி மயக்கம் அடைந்து விட்டார். 

இதையடுத்து, ஜெயமணி தனது நண்பரான பூ வியாபாரம் செய்யும் ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் சுந்தர மூர்த்தி என்ற சுந்தர் (25) என்பவரை வீட்டுக்கு வரவழைத்து தனது மனைவியுடன் உள்ளாசமாக இருக்க வைத்துள்ளார். 

போலீசில் புகார்

இதேபோல் சமீபத்தில் மற்றொரு நண்பரான மணிகண்டன் (26) என்பவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து அவருடனும் உடலுறவு கொள்ள தனது மனைவியை ஜெயமணி கட்டாயப்படுத்தி உள்ளார். 

 இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்.

இதனால் ஜெயமணியுடன் வாழ பிடிக்காமல் அந்த பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் தனக்கு  நேர்ந்த கொடுமை குறித்து  பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.  

3 பேர் கைது

துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் உத்தரவு பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய  இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து  ஜெயமணி மற்றும் அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தார்.

போலீஸ் விசாரணையில், ஜெயமணி குடிபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இதை பயன்படுத்தி அவரது நண்பர்கள் மதுவின் வாங்கி கொடுத்து, அவரது மனைவியின் வாழ்க்கையை சூறையாடி இருப்பது தெரியவந்தது. இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story