ஆலங்குடி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ஆலங்குடி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குடி,ஜூன்.8-
ஆலங்குடி தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திபெருமானுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், தயிர், திரவியம் உள்பட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள், தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு, சரஸ்வதி, துர்க்கை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அதிகாலபைரவர், பாலபைரவர் மற்றும் நவக்கிரகங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Related Tags :
Next Story