ஆம்பூரில் நகராட்சி சார்பில் தினமும் 360 லிட்டர் கபசுர குடிநீர் வினியோகம்
ஆம்பூரில் நகராட்சி சார்பில் தினமும் 360 லிட்டர் கபசுர குடிநீர் வினியோகம்
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நகராட்சி சார்பில் தினமும் சுமார் 360 லிட்டர் கபசுர குடிநீர் தயார் செய்யப்பட்டு ஆம்பூர் நகரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நேதாஜி ரோடு மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நிரந்தர கபசுர குடிநீர் குடில் அமைக்கப்பட்டு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் ஆய்வு செய்து கபசுர குடிநீர் அருந்தினார். ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் த.சவுந்தரராஜன், ஆம்பூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story