திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:02 PM IST (Updated: 7 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக அ.பவன்குமார்ரெட்டி (வயது 35) நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரை, திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் பூங்கொத்துக் கொண்டு வரவேற்றார். 

புதிய போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2016-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து தேசிய காவல் பயிற்சியகத்தில் அடிப்படை பயிற்சி முடித்தார். பின்னர் மதுரை மாவட்டத்தில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார்.

இதையடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர சட்டம்-ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியாற்றினார். அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது அவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று உள்ளார்.

Next Story