நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சரிடம் கோரிக்கை
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை அமலில் இருந்தது. ஆன்லைனில் விவரங்களை உள்ளீடு செய்தவுடன் அனுமதி கிடைத்து விடுவதால், பலர் வெளியிடங்களில் இருந்து வந்தனர்.
இதை தவறாக பயன்படுத்தி முழு ஊரடங்கில் சுற்றுலா பயணிகளும் வந்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதல்-அமைச்சரிடம் வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இ-பாஸ் அமல்
இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர கலெக்டரிடம் இ-பாஸ் பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்து உள்ளது.
குறிப்பாக இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இந்த 2 காரணங்களுக்காக செல்கிறவர்கள் மருத்துவ சிகிச்சை என்றால் டாக்டரின் சீட்டு போன்ற உரிய ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நேர்முக உதவியாளர் (பொது) மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வரவேண்டும் என்றால் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இங்கு வசிப்பதற்கான ஆதார் அட்டை, ரேஷன் அடையாள அட்டை போன்றவற்றை காண்பித்து வர அனுமதி இல்லை.
தீவிர கண்காணிப்பு
இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இ-பாஸ் அனுமதி இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.
இ-பாஸ் நடைமுறையால் வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story