பாழடைந்து கிடக்கும் மருத்துவர்கள் குடியிருப்பு


பாழடைந்து கிடக்கும் மருத்துவர்கள் குடியிருப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:11 PM IST (Updated: 7 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

பாழடைந்து கிடக்கும் மருத்துவர்கள் குடியிருப்பு

திருவரங்குளம்,ஜூன்.8-
திருவரங்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த பல மாதங்களாக எரியவில்லை. மேலும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பட்டமரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் நோயாளிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.  இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடங்கள் பாழடைந்து காணப்படுகி்றது. எனவே குடியிருப்புகளை சரிசெய்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள  இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story