புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை, ஜூன்.8-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகினர்.
மேலும் 9 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று எண்ணிக்கையோடு, இறப்பும் அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகி இருந்தனர்.
இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.
2,406 பேர் சிகிச்சை
மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Related Tags :
Next Story