மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை அதே ஊரை சேர்ந்த ஆராதுரை மகன் மோகன்ராஜ்(வயது 23) கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தில் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story