ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்த மினிவேன் டிரைவர் தற்கொலை
ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்த மினிவேன் டிரைவர் தற்கொலை
ஆரணி
ஆரணி டவுன் ராமகிருஷ்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 47), சரக்கு மினிவேன் டிரைவர். இவர், ஊரடங்கால் வேலையில்லாமலும், போதிய வருமானம் இல்லாமலும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்தார். அவர், நேற்று காலை ராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் உள்ள கோணிப்பைகள் தைக்கும் கடையின் மாடி படிக்கட்டில் ஏறி அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரின் மனைவி ரூபாவதி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கோகுலகிருஷ்ணனுக்கு சந்தியா (18) விக்னேஷ் (17) என்ற மகளும், மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story