இளையான்குடி,
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய் தொற்று என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா அனைவரையும் வரவேற்றார்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தலைவர் முகமது சலீம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம்முடைய பங்கு குறித்து எடுத்துரைத்தார்.இதை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முகமது ஒருங்கிணைப்பு செய்தார். முடிவில் பேராசிரியர் செய்யது யூசுப் நன்றி கூறினார்.