தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ மாயனூர், மேலமாயனூர் ஆகிய ஊர்கள் காவிரிக்கரை ஒட்டி அமைந்துள்ளன. கீழ மாயனூர் பகுதியில் விவசாயம் மற்றும் வீட்டு இணைப்பிற்கு செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால் அந்த வழியாக விளைபொருட்களை டிராக்டரில் கொண்டு செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story