பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காதலன் கைது
வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர். 3 நண்பர்களும் சிக்கினர்.
நாகர்கோவில்:
வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர். 3 நண்பர்களும் சிக்கினர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமியுடன் 4 பேர்...
குமரி மாவட்டம் உலக்கை அருவி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் 17 வயது சிறுமியுடன், 4 வாலிபர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே பூதப்பாண்டி போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். பின்னர் 5 பேரும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் அனந்தபாலம் பகுதியை சேர்ந்த ஆல்டோ மைக்கிள் டோனிக் (வயது 21), கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற தளபதி சூர்யா, கிஷோர் குமார் (19), காட்வின் மேஸ்வாக் (21) என்பதும், சிறுமி குளச்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த சிறுமியும், ஆல்டோ மைக்கிள் டோனிக்கும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
இதனையடுத்து ஆல்டோ மைக்கிள் டோனிக், ஊரடங்கின்போது ஜாலியாக பொழுதை கழிக்கலாம் என காதலியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வனப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
அங்கு காதலன், சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, நடந்த விவரத்தை தன்னுடைய தாயாருக்கு தெரிவித்து, எப்படியாவது காப்பாற்றும்படி தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாயார், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர். மேலும், பாலியல் தொல்லை கொடுத்த ஆல்டோ மைக்கிள் டோனிக், அதற்கு உடந்தையாக இருந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி பிளஸ்-1 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story