கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x
தினத்தந்தி 7 Jun 2021 11:46 PM IST (Updated: 7 Jun 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் சுசீலாதேவி (வயது 19). இவர் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த சுசீலாதேவியை அதிகாலையில் காணவில்லை. இதையடுத்து சுசீலாதேவியை அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுசீலாதேவியின் தாய் தனலெட்சுமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Next Story