பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டிய வாலிபர்


பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டிய வாலிபர்
x
தினத்தந்தி 7 Jun 2021 11:47 PM IST (Updated: 7 Jun 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

சிங்காநல்லூரில் பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டிய வாலிபர் மனநலஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை

சிங்காநல்லூரில் பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டிய வாலிபர் மனநலஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர் 

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). மதுபோதைக்கு அடிமையான அவர் அந்தப்பகுதியில் அவ்வப்போது தகராறு செய்து வருகிறார். 

போதையில் இருக்கும்போது கத்தி, கம்பி போன்ற ஆயுதங்களுடன் அந்தப்பகுதியில் உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். 

இது குறித்து யாராவது அவரிடம் கேட்டால், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கையில் இருக்கும் பொருட்களை எடுத்து அடித்துவிடுவதாகவும் மிரட்டி வருகிறார். இதனால் அவரிடம் யாரும் எதுவும் கேட்பது இல்லை.  

கத்திமுனையில் மிரட்டல்

இந்த நிலையில், அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் அவரது நடவடிக்கைகளை கண்டித்து தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கத்தி, கற்களைக் கொண்டு அவர்களை தாக்க முயன்றுள்ளார். 

அத்துடன் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டவும் செய்தார். இதனை ஒருவர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. 

அப்போது அந்த நபரை பார்த்து ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரை பார்த்தும் மிரட்டினார். 

ஆஸ்பத்திரியில் அனுமதி 

உடனே இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து மணிகண்டனை மடக்கி பிடித்து அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவருக்குமது போதையில் அடிமையான தால் மது குடித்ததில் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் கூறும்போது, மனநலம் பாதிக்கப் பட்ட மணிகண்டன், கடந்த ஒரு வாரமாக வீட்டில் தனது பெற்றோரை அடித்து உதைத்ததுடன், வாகனங்களையும் சேதப்படுத்தி உள்ளார். 

எனவே அவருக்கு சிகிச்சை அளிக்க நீலாம்பூரில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளோம் என்றனர். 


Next Story