புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு


புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:51 PM IST (Updated: 7 Jun 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்சரண் தேஜஸ்வி நேற்று பதவியேற்று கொண்டார்.

கிருஷ்ணகிரி:
புதிய போலீஸ் சூப்பிரண்டு
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பண்டி கங்காதர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். 
இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 17-வது போலீஸ் சூப்பிரண்டு ஆவார்.  போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள சாய்சரண் தேஜஸ்வி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். கடந்த, 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று, நெல்லை மாவட்டத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றார்.
பொறுப்பேற்பு
பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக அவர் பணியை தொடங்கினார். அங்கிருந்து சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு அங்கு 1½ ஆண்டு பணியாற்றிய அவர், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்று கொண்டார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
அவருக்கு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல புதிய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்விக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story