வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு
திண்டிவனத்தில் பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகையை திருடிச்சென்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மனைவி ஜெகதா,மகள் கீர்த்தனா. இதில் கீர்த்தனா விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் தனது தாயுடன் மொபட்டில் கீர்த்தனா வெளியே சென்றார். பின்னர் மதியம் 1.30 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் 2½ பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீசார் மற்றும் கைரேகை பிரிவு ஏ.டி.எஸ்.பி சோமசுந்தரம் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story