சித்தராமையா குணம் அடைந்து வீடு திரும்பினார்
காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி சித்தராமையா குணம் அடைந்து வீடு திரும்பினார்
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தபோதும், அவருக்கு தொற்று இல்லை என்று உறுதியானது. இதையடுத்து காய்ச்சலுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் முழுமையாக குணம் அடைந்ததை அடுத்து நேற்று அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரை அந்த மருத்துவமனை டாக்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
அந்த மருத்துவமனைக்கு வெளியே அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு வழங்கினர். அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், அங்கிருந்து ஆதரவாளர்களிடம் விடைபெற்று காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story