தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கின


தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 8 Jun 2021 1:29 AM IST (Updated: 8 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

தீப்பெட்டி ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன.

விருதுநகர்,
 தீப்பெட்டி ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன.
 முறையீடு 
கடந்த வாரம் விருதுநகரில் அரசு ஆஸ்பத்திரி அருகே 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் கலெக்டருடன் மாவட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
 மேலும் கலெக்டரிடம் வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என கேட்டபோது கலெக்டர் கண்ணன் வெளிமாநிலங்களில் தீப்பெட்டி தேவை அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட அனுமதித்தால் தீப்பெட்டி ஆலை ஊழியர்கள் வாழ்வாதாரம் பெறுவார்கள் என தெரிவித்தார்.
ஆலைகளுக்கு அனுமதி 
இதுபற்றி தான் உணர்ந்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். 
அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் தீப்பெட்டி ஆலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
மாவட்டத்தில் 650 தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. தீப்பெட்டி ஆலைகள் அனைத்தும் முழுஊரடங்கால் முற்றிலுமாக செயலிழந்த நிலையில் மூடப்பட்டிருந்தன. இதனால் தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.
வாழ்வாதாரம் 
 இதனை கருத்தில் கொண்டே கலெக்டர் கண்ணன் இதுபற்றி முதல்-அமைச்சரிடம் தெரிவித்தவுடன் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 650 தீப்பெட்டி ஆலைகளும் 50 சதவீத ஊழியர்களுடன் நேற்று செயல்பட தொடங்கின.
 இதன் மூலம் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றும் ஊழியர்களும் வாழ்வாதாரம் பெறும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story