ரெம்டெசிவிர் மருந்து விற்ற மாநகராட்சி ஊழியர் கைது
பா.ஜனதா எம்.பி.யின் பெயரை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்து விற்ற மாநகராட்சி ஊழியர் கைது
பெங்களூரு:
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்கும் கும்பலை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில், பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள கொரோனா உதவி மையத்தில் வேலை செய்யும் சிலர், பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவின் எம்.பி.யின் பெயரை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக கூறி, அவரது உதவியாளர் பிரகாஷ், ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரெம்டெசிவிர் மருந்து விற்கும் நபர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அக்ரஹார தாசரஹள்ளியை சேர்ந்த சேத்தன் (வயது 26) என்பவரை கைது செய்துள்ளனர். இவர், தெற்கு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி உதவி மையத்தில் ஊழியராக வேலை செய்தது தெரியவந்தது.
மேலும் தேஜஸ்வி சூர்யா எம்.பி.யின் பெயரை பயன்படுத்தியும், அவரது அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் கூறி சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்தை ரூ.10 ஆயிரத்திற்கு விற்றது தெரியவந்தது. கைதான சேத்தன் மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story