கர்நாடகத்தில் புதிதாக 11 958 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 11,958 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் புதிதாக 11,958 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குணம் அடைந்தவர்கள்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 553 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 11,958 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 7 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 340 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 27,299 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 824 ஆக குறைந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
340 பேர் உயிரிழந்தனர்
பாகல்கோட்டையில் 112 பேர், பல்லாரியில் 267 பேர், பெலகாவியில் 355 பேர், பெங்களூரு புறநகரில் 292 பேர், பீதரில் 13 பேர், சாம்ராஜ்நகரில் 209 பேர், சிக்பள்ளாப்பூரில் 282 பேர், சிக்கமகளூருவில் 365 பேர், சித்ரதுர்காவில் 294 பேர், தட்சிண கன்னடாவில் 408 பேர், தாவணகெரேயில் 380 பேர், தார்வாரில் 313 பேர், கதக்கில் 141 பேர், ஹாசனில் 1,108 பேர்,
ஹாவேரியில் 179 பேர், கலபுரகியில் 67 பேர், குடகில் 230 பேர், கோலாரில் 298 பேர், கொப்பலில் 155 பேர், மண்டியாவில் 597 பேர், மைசூருவில் 1,213 பேர், ராய்ச்சூரில் 64 பேர், ராமநகரில் 48 பேர், சிவமொக்காவில் 1,224 பேர்,
துமகூருவில் 420 பேர், உடுப்பியில் 394 பேர், உத்தரகன்னடாவில் 364 பேர், விஜயாப்புராவில் 137 பேர், யாதகிரியில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 199 பேரும், பாகல்கோட்டையில் 3 பேரும், பல்லாரியில் 9 பேரும், பெலகாவியில் 15 பேரும், பெங்களூரு புறநகரில் 5 பேரும், பீதரில் ஒருவரும், சாம்ராஜ்நகரில் ஒருவரும், சிக்பள்ளாப்பூரில் 2 பேரும், சிக்கமகளூருவில் 5 பேரும்,
சித்ரதுர்காவில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 3 பேரும், தாவணகெரேயில் 5 பேரும், தார்வாரில் 8 பேரும், கதக்கில் 2 பேரும், ஹாசனில் 10 பேரும், ஹாவேரியில் 10 பேரும், கலபுரகியில் ஒருவரும், குடகில் ஒருவரும், கோலாரில் 6 பேரும், கொப்பலில் 6 பேரும், மண்டியாவில் 3 பேரும்,
மைசூருவில் 17 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 9 பேரும், துமகூருவில் 4 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 2 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும் என மொத்தம் 340 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story