தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்; அதிகாரிகளுடன் கலெக்டர் சமீரன் ஆலோசனை
தென்காசியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் சமீரன் ஆலோசனை நடத்தினார்.
தென்காசி, ஜூன்:
தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யோகானந்த், பேரிடர் மேலாண்மை தாசில்தார் அமிர்தராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போதைய ஊரடங்கின் போது அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைகள் கூறப்பட்டன.
Related Tags :
Next Story