மாவட்ட செய்திகள்

பண்ணை வீட்டில் தனியாக இருந்த முதியவர் படுகொலை + "||" + The old man who was alone in the farm house was murdered

பண்ணை வீட்டில் தனியாக இருந்த முதியவர் படுகொலை

பண்ணை வீட்டில் தனியாக இருந்த முதியவர் படுகொலை
பண்ணை வீட்டில் தனியாக இருந்த முதியவர் படுகொலை
துமகூரு:

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சி.எஸ். துர்கா அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கொரட்டகெரே தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை ராமண்ணா (வயது 71). லோகேசின் தந்தை ராமண்ணாவும், தாயும் பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

 இந்த நிலையில் ராமண்ணாவின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவர், துமகூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக பண்ணை வீட்டில் ராமண்ணா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

 ராமண்ணாவின் தோட்டத்தில் அதேப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று காலை ரஞ்சித் வழக்கம் போல தோட்டத்துக்கு வேலைக்கு வந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள ராமண்ணாவின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. 


இதனால் ரஞ்சித் சத்தம் கொடுத்தார். ஆனால் பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரஞ்சித், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் ராமண்ணா, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், லோகேசுக்கும், பவனஹள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். 


அதன்பேரில் பவனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ராமண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மர்மநபர்கள் ராமண்ணாவை கொலை செய்தது தெரியவந்தது.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். 

இந்த கொலை தொடர்பாக அவர் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா கூறுகையில், ராமண்ணா பாக்கு விவசாயம் செய்து வந்தார். இதனால் அவரிடம் பல லட்சம் ரூபாய் நகை-பணம் இருப்பதாக தெரிகிறது. 

இதன்காரணமாக அந்த நகை-பணத்தை கொள்ளையடிக்க மர்மநபர்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்துள்ளனர். 
மேலும் நகை-பணத்தை கொள்ளையடிக்க மர்மநபர்கள் பீரோவில் தேடி உள்ளனர். ஆனால், கொள்ளை போய்விடுமோ என்ற பயத்தில் ராமண்ணா, நகை-பணத்தை பீரோவில் வைக்காமல், வேறு இடத்தில் வைத்திருந்தார்.

 இதனால் பல லட்சம் ரூபாய் நகை-பணம் தப்பியது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்றார். இதுகுறித்து பவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.