கூட்டுறவு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை
தளவாய்புரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பூட்டிக்கிடக்கும் பழனிச்சாமிநாடார் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மருத்துவமனையை திறக்க தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. எடுத்த தொடர் முயற்சியால் மருத்துவமனையை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் செட்டியார்பட்டி வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கூட்டுறவு சார்பதிவாளர் முத்துலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் சிங்கராஜ் ஆகியோர் மருத்துவமனையை பார்வையிட்டனர். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
மக்கள் நலன் காக்கும் மருத்துவத்துறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு கூட்டுறவு மருத்துவமனை மட்டுமே உள்ளது. இந்த மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்த அமைச்சர்களின் மூலமாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுப்பேன். இந்த கூட்டுறவு மருத்துவமனை இன்னும் ஓரிரு வாரங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என கூறினார்.
இதில் செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், தளவாய்புரம் ஊர்த்தலைவர் உதயசூரியன், செல்லத்துரை, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story