ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன
கே.கே.நகர்
திருச்சியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து திருச்சி மாநகரில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை கடந்த 21 நாட்களில் 6,610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 871 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசாரால் பாதுகாக்கப்பட்டு வந்தன. மேலும், வெயில் காலம் என்பதால் வாகனங்கள் தீப்பற்றி எரிந்து விடாமல் தடுப்பதற்காக வஜ்ரா வாகனம் மூலம் வாகனங்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாகனங்களை திருப்பி ஒப்படைக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் நேற்று முதல் கட்டமாக 15 நாட்களுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. வாகனங்களை எடுப்பதற்காக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை கொடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். இந்தப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story