சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 27 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 27 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 2:28 AM IST (Updated: 8 Jun 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோயும் தாக்கி வருகிறது.
மாவட்டத்தில் நேற்று மேலும் 27 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளது. இவர்களில் சேலத்தை சேர்ந்தவர்கள் 21 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 6 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
145 பேர் பாதிப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இன்று (நேற்று) வரை 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சேலத்தை சேர்ந்தவர்கள் 98 பேர் ஆவர். பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளில் 27 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு மாவட்டத்தில் சிலர் இறந்துள்ளனர் என்றனர்.

Next Story