திருச்சியில் மகள், மகன் சாவுக்கு காரணமான தந்தை கைது
திருச்சியில் மகள், மகன் சாவுக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்டார்
திருவெறும்பூர்
திருச்சியை அடுத்து திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 45). இவர், அமரர் ஊர்தி வாகனம் வைத்து வடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு சித்ராதேவி (40) என்ற மனைவியும், தனலட்சுமி (19), திவ்யா (16) என்ற 2 மகள்கள் மற்றும் விக்னேஸ்வரன் (13) என்ற ஒரு மகன். தனலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
திவ்யா, துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பும், விக்னேஸ்வரன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நந்தகுமார், சித்ராதேவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ராதேவி சம்பவத்தன்று அரளி விதையை (விஷம்) அரைத்து தின்று விட்டு தனது மகள்கள் தனலட்சுமி, திவ்யா மற்றும் மகன் விக்னேஸ்வரன் ஆகிய 3 பேருக்கும் கொடுத்துள்ளார். இதில் மயங்கி விழுந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஸ்வரன் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சித்ராேதவி மற்றும் தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சைக்கோ தந்தை கைது
இந்தநிலையில், குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக நந்தகுமாரை துவாக்குடி போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனது குடும்பத்தினரை பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தியதால் இந்த முடிவை அவர்கள் 4 பேரும் எடுத்ததாக தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நந்தகுமார், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை டி.வி. பார்க்க கூடாது, செல்போன் உபயோகிக்க கூடாது என்று தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் செல்போனை பிடுங்கி பெட்டியில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.
மேலும் நந்தகுமாருக்கு கோபம் வரும்போதெல்லாம் அவரது மகனை இரும்பு குழாயால் அடித்தும், மகளை வீட்டில் உள்ள பாத்திரங்களை எடுத்து தாக்கியுள்ளார். அவரது மனைவி சித்ராதேவி, மூத்த மகளான தனலட்சுமியை நந்தகுமாருக்கு தெரியாமல் வட்டிக்கு பணம் வாங்கி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த நந்தகுமார், உனக்கு பணம் எப்படி வந்தது என்று கேட்டு மனைவி மற்றும் மகள்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு சைக்கோ போல தினமும் தனது குடும்பத்தினரை நந்தகுமார் கொடுமைப் படுத்தியுள்ளார். இதன் காரணமாகவே, அவர்கள் 4 பேரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்து உள்ளனர் என்று தெரிவித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நந்தகுமார், சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story