ரயிலில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்


ரயிலில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jun 2021 2:49 AM IST (Updated: 8 Jun 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

ரயிலில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

திருச்சி
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன. இதனால், மதுப்பிரியர்கள் திண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.50 மணிக்கு மைசூரில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் வந்தது. அப்போது 4 பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பைகளில் 196 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 1 லிட்டர் மதுபாட்டில் 3 என மொத்தம் 199 பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அவற்றை ரெயிலில் கடத்தி வந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அண்ணன், தம்பிகள்
கைதானவர்கள் அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் சுபாஷ் (வயது 23), ஆகாஷ் (20) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரை சேர்ந்த ராமதாஸ் மகன்கள் முரளி (33), மதன் (31) ஆவர்.
கைதான 4 பேரும் திருச்சி மாநகர அமலாக்கப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story