பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2021 2:52 AM IST (Updated: 8 Jun 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த லாடபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் தர்ஷினி(வயது 21). பி.ஏ. பட்டதாரியான இவர், மேற்கொண்டு உயர்கல்வி படிக்காமலும், வேலையின்றியும் வீட்டில் இருந்துள்ளார். 
இந்நிலையில் தர்ஷினி நேற்று காலை பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வயல் வேலைக்கு சென்று திரும்பிய அவரது பெற்றோர், தர்ஷினி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
இது குறித்து பெரம்பலூர் போலீசில் ஜெயராமன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் சம்பவ இடத்திற்கு சென்று, தர்ஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story