கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட மும்பை போலீசாருக்கு 10 நவீன வாகனம்
கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட மும்பை போலீசாருக்கு 10 நவீன வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போலீசாருக்கு நவீன வாகனம்
மும்பையில் கிர்காவ், ஜூகு, தாதர், வெர்சோவா உள்ளிட்ட கடற்கரைகள் உள்ளன. பொதுமக்கள் அதிகளவில் வருவதால், போலீசார் இந்த கடற்கரைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமூகவிரோத செயல்களை தடுக்க கடற்கரைகளில் ரோந்து பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.இந்தநிலையில் போலீசார் கடற்கரைகளில் வேகமாக ரோந்து பணியில் ஈடுபட 10 நவீன வாகனங்களை ரிலையன்ஸ் பவுண்டேசன் அமைப்பு, அரசு அனுமதியுடன் மும்பை போலீசுக்கு வழங்கி உள்ளது.
முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்
இந்த வாகனங்களை போலீசுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கிர்காவ் கடற்கரையில் நடந்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், உள்துறை மந்திரி திலீப் வால்சே மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆல் டெரைன் வெகிக்கிள் என அழைக்கப்படும் இந்த வாகனங்கள் கடற்கரை மட்டுமின்றி காடு, மலைப்பகுதிகளிலும், கரடுமுரடான பகுதிகளிலும் வேகமாக செல்லும் திறன் கொண்டது. எனவே இந்த வாகனங்களை ரோந்து பணி மட்டுமின்றி, மீட்பு பணிகளும் ஈடுபடுத்தலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story