காஞ்சீபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு


காஞ்சீபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 4:49 PM IST (Updated: 8 Jun 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த டாக்டர் சுதாகர், காஞ்சீபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவியேற்று கொண்டார். முன்னதாக புதிய போலீஸ் சூப்பிரண்டுக்கு காவல் துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

புதிதாக பதவியேற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறுகையில்:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடக்காவண்ணம் போலீஸ் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைத்து ரவுடிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சண்முகப்பிரியா சென்னை, சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தின் 3-வது போலீஸ் சூப்பிரண்டாக விஜயகுமார் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் திருப்பத்தூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார். இவருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story