ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2021 9:36 PM IST (Updated: 8 Jun 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒன்றிய செயலாளர் அழகு தலைமை தாங்கினார்.

பொட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். செங்கல்பட்டில் செயல்படாமல் இருக்கும் தடுப்பூசி மையத்தை திறக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பட்டத்தில், அகில இந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன், கோவிந்தாபுரம் கிளை செயலாளர் குமார், அஜித், ஜெகன், மாடசாமி, பாலசுப்பிரமணி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பசுவந்தனை, கொம்பாடி தளவாய்புரம், குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி

இதேபோல் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர்கள் முப்பிடாதி, மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். ஊத்தும்பட்டி, இடைசெவல், வில்லிசேரி, இனாம் மணியாச்சி, இலுப்பையூரணி கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் அழகு முத்து பாண்டியன் தனது  குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கயத்தாறில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கயத்தாறு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் லாரி ஓட்டுனர் சங்கம், வேன் ஓட்டுனர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் கல்உடைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார். இதில் நடராசன், சக்திராமன், சரஸ்வதி, வக்கீல் செல்வன், சுகிர்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story