தூத்துக்குடியில் 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது


தூத்துக்குடியில்  3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 9:39 PM IST (Updated: 8 Jun 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3½ டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 3½ டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் போலீசார் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி, முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வேகமாக வந்த ஒரு மினிவேன் மற்றும் காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த மினிவேன் மற்றும் காரில் 50 கிலோ கொண்ட 70 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளில் 3½ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியதாக அந்த வாகனங்களில் இருந்த அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 27), டூவிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (25), ராஜகோபால்நகரை சேர்ந்த மணிகண்டன் (26), வி.எம்.எஸ்.நகரை சேர்ந்த கார்த்திக் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து 70 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேன், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து, தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story