கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக்குழுவினர் நூதன போராட்டம்
கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக்குழுவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் மகளிர் சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் தோப்பு கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் நல வாரியம் மூலம் கடன் பெற்று வார தவணையில் பணத்தை கட்டி வந்தார்கள். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கு விதித்தது. இதனால் வேலை இல்லாமல் பெண்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். எனவே சுயஉதவிக்குழுவினரால் வாரந்தோறும் தவணை கட்ட முடியாததால் 3 மாதம் தவணை தொகை வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story