பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மத்திய அரசு கொேரானா தடுப்பூசி இலவமாக வழங்கக் கோரியும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசிகளை வழங்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகக்குழுவை சேர்ந்த ராஜேந்திரன், நகர செயலாளர் ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story