மகளிர் சுய உதவி குழுக்களிடம் கடனை திரும்பப்பெற மேற்கொள்ளும் கடினமான போக்கினை தவிர்க்க வேண்டும். கலெக்டர் எச்சரிக்கை
மகளிர் சுய உதவி குழுக்களிடம் கடனை திரும்பப்பெற மேற்கொள்ளும் கடினமான போக்கினை தவிர்க்க வேண்டும். கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். கொரோனா தொற்று அதிகமாக பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் குழுக்களிடம், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டித் தொகையினை உடனடியாக செலுத்துமாறு மிரட்டுவதாக புகார்கள் வந்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு நிதி நிறுவனங்கள் கடனை திருப்பப்பெறுவது தொடர்பாக மேற்கொள்ளும் கடினமான போக்கினை தவிர்த்திட வேண்டும். இது தொடர்பாக புகார்கள் பெறப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story