ஓட்டப்பிடாரம் பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்


ஓட்டப்பிடாரம் பகுதியில்   நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Jun 2021 10:06 PM IST (Updated: 8 Jun 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

நிவாரண பொருட்கள்

ஓட்டப்பிடாரம் பகுதியில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு, ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் விழா புதியம்புத்தூரில் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, நிவாரண பொருட்களை வழங்கினார். 
அப்போது, அவர் பேசியதாவது:-

கிருமி நாசினி

அரசு அறிவித்தபடி 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தூத்துக்குடி ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன், தூத்துக்குடி அரசு அண்ணா பொறியியல் கல்லூரி எந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் மலைராஜன், தமிழன்டா கலை இலக்கிய தலைவர் ஜெகஜீவன், மாநில செயலாளர் கதிர்வேல், பொருளாளர் பிரம்மராஜ், நாட்டுப்புறப்பாடகர் மாரிமுத்து, மகளிர் அணி தலைவி மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story