கொரோனா தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தம்


கொரோனா தடுப்பூசி போடும்பணி  தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Jun 2021 10:12 PM IST (Updated: 8 Jun 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் கையிருப்பு தீர்ந்ததால் கொரோனா தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது,.

திருவண்ணாமலை

2 வகையான தடுப்பூசிகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. அதன்டி ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ என 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பின்னர் 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. 
கையிருப்பு தீர்ந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சுகாதாரத் துறையினர் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் காணப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதின் அடிப்படையில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்ட தொடங்கினர். 

இந்த நிலையில் தடுப்பூசி மருந்து கையிருப்பு தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் தீர்ந்ததால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணியானது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. 

Next Story